பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இலக்கிய அமைச்சர்கள் தலைவராகிய வில்லவன் கோதையும் பிற அரசியல் சுற் றமும் அங்கு வந்து தங்கினர். மணல் மேட்டில் தங்கிய மன்னர் பெருமாளுகிய செங்குட்டுவன் மலையிடத்தே எழும் பல்வேறு ஒலிகளை யும் கேட்டும் ஆங்கமைந்த அரிய இயற்கைக் காட்சி களைக் கண்டும் இன்புற்றுக் கொண்டிருந்தான். அவ் வேளையில் மலை வாழும் வேட்டுவக் கூட்டத்தார் மலை யில் கிடைக்கும். அரிய பொருள்களையெல்லாம் அரச னுக்குக் கையுறையாகத் தலைமேல் தாங்கிச் செங்குட்டு வன் திருமுன் வந்து சேர்ந்தனர். வேட்டுவர், வேந்தனைக் காண்டல் வேந்தனைக் கண்ட வேட்டுவர், தாம் கொண்டு வந்த மலைபடு பொருள்களையெல்லாம் அவன் திருமுன் வைத்து, 'ஏழ்பிறப்படியேம், வாழ்க! நின் கொற் றம் " என்று வாழ்த்தி, அடிகளில் விழுந்து பணிந்த னர். செங்குட்டுவன் அவர்கட்கு மலர்ந்த முகங்காட் டித் திருமுடி அசைத்து நல்வரவு கூறினன். பின்னர், " நீவிர் வாழும் மலைநாட்டு நிகழ்ந்த சிறப்பு ஏதேனும் உண்டோ?' என்று அன்புடன் வினவினன். அது கேட்ட வேட்டுவர் தலைவன் அம் மலைநாட்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சியை வேந்தனுக்கு நன்கெடுத்து விளக்கினன். மலைநாட்டில் நடந்த நிகழ்ச்சி வேந்தர் வேந்தே! யாங்கள் வாழும் மலைக் கண்ணே ஓர் வேங்கை மரத்தின் நீழலில் மங்கை ஒருத்தி ஒரு மார்பினை இழந்தவளாய்ப் பெருந் துய ரோடு வந்து நின்ருள். அச் சமயத்தில் விண்ணி