பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அழும்பில் வேள் 37 னின்று இறங்கிய விமானத்தில் தேவர்கள் பலர் அங்கு வந்துற்றனர். அவர்கள் அங்கு நின்ற மங்கைக்கு அவள் கணவனைக் காட்டி அவளையும் உடன் அழைத் துக் கொண்டு விண்ணுலகம் சென்றனர். இவ் அரிய காட்சியை யாங்கள் கண்ணுரக் கண்டோம். அம்மங்கை நல்லாள் எவ்வூரினளோ? யார் பெற்ற மகளோ ? அறியோம். இது பெரியதொரு வியப்பாய் இருந்தது. தேவரீர் திருநாட்டில் நிகழ்ந்த இச்செய்தியினைத் தாங் கள் தெரிந்தருள வேண்டும்,' என்று கூறி முடித்தான் அவ் வேட்டுவர் தலைவன். சாத்தனர் விளக்கம் இவ்வாறு வேட்டுவர் தலைவன் விளம்பிய செய் தியை ஆங்கு உடனிருந்து கேட்ட புலவராகிய சீத்த லைச் சாத்தனர் அவ் வியத்தகு நிகழ்ச்சியைப் பற்றி வேந்தனுக்கு விளக்கிக் கூறினர். அவர் மதுரைமா ந்கரில் கோவலன் கொலையுண்டது முதலாய நிகழ்ச்சி களை யெல்லாம் நேரில் கண்டறிந்தவராதலின் அவை அனைத்தையும் அரசனுக்குத் தெளிவாக எடுத்துரைத் தாா. “ அரசர் பெருமானே ! காவிரிப்பூம்பட்டினத்து வணிகனுகிய கோவலன் என்பான், தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை மதுரைமா நகரில் விற்று வாணிகம் செய்ய வந்தான். அவனைப் பாண்டியன் தன் தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்று கொலை புரிவித்தான். அதனை அறிந்த கண்ணகி கடுஞ் சினம் கொண்டு பாண்டியன் அவையில் வழக்காடி வென்ருள். மற்ருெரு சிலம்பை மன்னன் தேவியின் முன்னர் வீசி எறிந்து வஞ்சினம் கூறினுள். பின்னர்