பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இலக்கிய அமைச்சர்கள் டின் நிலையையும் அரசின் ஏற்றத்தையும் நன்கு அறிந்த வராதலின், “ இந்நாவலந் தீவில் நம் பகைவராயுள்ள அரசர்களின் ஒற்றர்கள் இவ் வஞ்சிமாநகரை விட்டு நீங்காது சுற்றித் திரிகின்றனர். அவ் ஒற்றர்களே பகையரசர் செவிகளில் நம் வடநாட்டு யாத்திரை பற்றிய செய்திகளைச் சென்று தெரிவிப்பர். ஆதலின் நம் செலவை இந்நகரில் மட்டும் பறையறைந்து தெரி வித்தால் போதும்,' என்று எடுத்துரைத்தார். ச்ெங் குட்டுவனும் அதற்கு இசைந்தனன். பின்னர்ப் பேரி யாற்றங் கரையினின்று புறப்பட்டு, அரசன் தன் பரிவாரத்துடன் வஞ்சிமாநகரை அடைந்தான். அரசன் நகருள் புகுந்ததும் அவனது வடநாட்டு யாத்திரை பற்றிய செய்தி, யானைமேல் முரசேற்றி அறைந்து அறிவிக்கப் பெற்றது. அமைச்சரது ஆட்சித்திறன் செங்குட்டுவன், நிமித்திகன் கூறிய நன்ளிைல் பத்தினித் தெய்வத்தைச் சமைத்தற்குரிய கல்லை எடுத் தற்கு வடதிசை நோக்கிப் புறப்பட்டான். அவன் வட நாடு சென்று மீள முப்பத்திரண்டு திங்கள் ஆயின. அத்துணை நீண்ட கால முழுதும் அமைச்சராகிய அழும்பில் வேளே சேர நாட்டின் அரசியலை நடத்தி யிருக்க வேண்டும். அக்காலத்தில் சேரநாடு குழப்ப மின்றி மிகவும் அமைதியாகவே விளங்கியது. சேரநாட் டுக் குடிகள் அந்நாளில் செங்குட்டுவன் வடநாட்டில் அடைந்த வெற்றிகளைக் கேட்ட பொழுதெல்லாம் பெரு. மகிழ்ச்சியுற்றவர்களாய்த் தாம் பெற்ற பெருமையாகவிே கொண்டு மகிழ்ந்தனர். இவற்றிற்கெல்லாம் காரண மாக விளங்கியது அமைச்சர் அழும்பில் வேளின் ஆட்