பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய அமைச்சர்கள் திருவாதவூரர், சச்சங்கன் அமைச்சர், அருண்மொழித் தேவர் முதலிய சான்ருேர் பலரின் அமைச்சுத் திறனும் அதனுல் நாட்டுக்கும் மொழிக்கும், நன்னெறிக்கும் விளைந்த சீர்சிறப்புக்களும், தெளிவுற எடுத்து இதன் கண் விளக்கப் பட்டுள்ளன. இவற்றிற்கு வேண்டும் அகப்புறச் சான்றுகள் மிகப்பலவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுல் அமைச் சர்கள் பலரின் வரலாறுகளும், அக்காலத்திருந்த தமிழக வரலாறும், மன்னர் பலரின் வரலாறுகளும் இதன் கண் திகழ்கின்றன. பின்னும் இதன் கண் அறிஞர் கூறும் அமிழ்திலுமினிய அறவுரைகளும் பல காணப்படுகின்றன. இந்தால் உயர்நிலைப்பள்ளித் துணைப்பாடமாக வைத்தற் குரிய தகுதி வாய்ந்தது. கழகத்தார் விருப்பத்தின்படி இந் நூலை ஆக்கித்தந்த ஆசிரியர், திருநெல்வேலி ம. கி. தா. இந்துக் கலாசாலைத் தமிழாசிரியர் திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற் புலவர், திரு. அ. க. நவதேகிருட்டிணன் அவர்கட்குக் கழகத்தார் நன்றி உரித்தாகுக. மேலும், இந் நூலை இயற்றிய ஆசிரியர் எழுகிய பலதுறை நூல்கள் கழக வாயி லாக வெளிவந்துள்ளன. அவை பள்ளியிலும் நூல் கிலேயங் களிலும் விழைவொடு பயிலப்படுவதை யாவரும் அறிவர். இந்நூலைக் கல்வித்துறை முதன்மையரும் ஆசிரிய மாணவர்களும் பெற்றுப் போற்றித் துணைபுரிவார்களாக. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.