பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இலக்கிய அமைச்சர்கள் அவன் வலியிழந்து அழிவது உறுதியென்பதையும், அதனுல் நாட்டிற்கும் மக்களுக்கும் நேரும் கேட்டையும் தெளிந்து கொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்த நினைந்தான். அவன்பால் தூது சென்று அச்செயலைச் செம்மையாகச் செய்து வருதற்குத் தகுதியுடையார் ஒளவையாரே என எண்ணினன். அவ்வாறே அவரைத் தொண்டைமானிடத்துத் துதுவிட்டான். அயல் நாட்டு அரசன்பால் பெண்ணுெருத்தி தூது சென்று ஒதினுள் என்னும் பெருமை உலகிலேயே முதன் முதல் தமிழகத்திற்கும் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாருக்குமே வாய்த்தது. மூவகைத் தூதர் அயல்நாட்டு மன்னரிடத்துத் துண்துரைக்கச் செல் பவர் மூவகையினர் ஆவர். வகுத்துக் கூறுவார், கூறியது கூறுவார், ஓலை கொடுத்து நிற்பார் என்று அவர்களை வகைப்படுத்துவர். அமைச்சியல் வகுத்த வள்ளுவர் அமைச்சரே தூது செல்லுதற்கும் தகுதி யுடையார் என்னும் கருத்தால் அப்பகுதியில் தூதர் இலக்கணத்தையும் விளக்கினர். தூதர் இலக்கணம் தூதராவார் அமைச்சுரிமை பூணற்குரிய குடிப் பிறப்பும், அரசர் விரும்பும் பண்பும், சுற்றத்தார் மாட்டுப் பற்றும் பெற்றவராய் இருத்தல்வேண்டும். அரச ரிடத்து அன்பும் எதனையும் ஆராய்ந்து பேசும் அறி வாற்றலும் அவர்பால் அமையவேண்டும். கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவு கொண்டவராய் இருத் தல் வேண்டும். அயலரசர்பால் சொல்லத்தக்க செய்தி கள் பலவாயின் அவற்றைத் தொகுத்துச் சொல்லுதல்,