பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இலக்கிய அமைச்சர்கள் விளைந்துள்ளது ; அதனுல்தான் அவர்கள் செய்யும் சிகிச்சையால் நோய் தணியாது பெருகுகின்றது ; ஆதலின் அச் சம்பந்தரே இங்கு வந்தால்தான் தங்கள் நோய் தீரும்,' என்று அரசனுக்கு எடுத்துரைத்தார். அரசியாரும் அக் கருத்தை வலியுறுத்தினர். இருவர். தம் உரையினையும் கேட்ட பாண்டியன் சம்பந்தரை அழைத்து வருதற்கு இசைந்தான். திருமடத்தில் சம்பந்தர் காட்சி அரசன் இசைவைப் பெற்ற அமைச்சர் குதிரை யேறித் திருமடத்தை நோக்கிப் புறப்படலானர். அரசி யாரும் சிவிகையேறிச் சம்பந்தர் தங்கிய திருமடத்தைச் சார்ந்தார். இருவரும் ஆங்குச் சென்று ஞானமே வடிவாய் விளங்கிய சம்பந்தப் பெருமானைக் கண் களிப்பத் தரிசித்தனர். அப்பெருமானுக்குச் சமண் கொடியோர் இழைத்த தீங்கினை எண்ணி இனைந்து கண்ணிர் சொரிந்தனர். அவர் திருவடியில் விழுந்து பணிந்தனர். அவர்கள் இருவரையும் சம்பந்தர் தம் திருக்கரத்தால் எடுத்தருளித் தேற்றினர். திரு வுடையீர்! உங்களுக்குத் தீங்கு ஏதும் விளைந்ததோ ? . என்று வினவினர். அது கேட்ட அமைச்சர், 'பெருமானே! தங்கட்கு வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைச் செயல் கேட்டு அஞ்சி வருந்திைேம். திருவருளால் தங்கள் திருமேனிக்குத் தீங்குநேராதெனத் தெளிந்தோம். அவ் வஞ்சகர் செய்த தீத்தொழில் எங்கள் மன்னவனுக்கு வெப்பு நோயாய் வந்து மூண்டது. அச்சமணர்களின் மருந்தாலும் மந்திரத்தாலும் அந்நோய் தீராது. இன்ன லுறும் மன்னவன் முன்னல் அவரைத் தாங்கள் வென்