பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 71 தொழுது செப்பினன். பாண்டியன் வேண்டுகோளை ஏற்றருளிய சம்பந்தர் அருளுடன் நோக்கி மீண்டும் தமது திருக்கரத்தால் திருநீற்றை எடுத்து அவனது இடப்பாகத்தில் தடவினர். உடனே பாண்டியன் இருபால் நோயும் நீங்கி இன்புற்ருன். அது கண்ட அரசியாரும் அமைச்சரும் சம்பந்தர் திருவடி பணிந்து, "யாங்கள் பெருமையுற்ருேம்; பிறந்ததன் பயனையும் பெற்ருேம்; எங்கள் மன்னன் பிறவாத பெருநெறியை உற்ருன்," என்று உவகை பொங்க உரைத்து இன்புற்றனர். வெப்பு நோய் நீங் கிய வேந்தனும் இன்புற்று உச்சிமேல் கரங்குவித்துச் சம்பந்தரை உளங்குளிர வணங்கின்ை. அனல் வாதமும் புனல் வாதமும் பின்னர்ச் சமணர்கள், நம் சமய உண்மைகள் எழுதிய ஏடுகளை நெருப்பிலும் நீரிலும் இட்டு ஒட்டு வோம்,' என்றனர். முதற்கண் அனல் வாதம் நிகழ்ந் தது. அதில் சம்பந்தரே வென்ருர். பின்பு புனல் வாதம் தொடங்கினர். அப்பொழுது குலச்சிறையார் குறுக்கிட்டுச் சமணரை நோக்கி, ' இம்முறையும் நீவிர் தோற்ருல் என்செய்வது ?" என்று வினவினர். சமணர்கள் பொருமையும் சினமும் பொங்கியவராய் வாய் சோர்ந்து, “ இவ்வாதில் அழிவோமாகில் வேந் தனே எம்மை வெங்கழு ஏற்றுவான்," என்று வீறு டன் கூறினர். வைகையாற்று வெள்ளத்தில் இரு திறத்தார் ஏடுகளும் விடப்பெற்றன. சமணர் விட்ட ஏடு அவர்களை நட்டாற்றில் விட்டுக் கடலிடம் போய்ச் சேர்ந்தது. சம்பந்தர் ஏடோ வெள்ளத்தை எதிர்த்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தது, உலகினர்க்கு