பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இலக்கிய அமைச்சர்கள் இதுவே உண்மைப் பொருள் என்று காட்டிப் பிறவி யாற்றில் செல்லும் பெருந்தவர் உள்ளம்போல விரைந்து எதிர்ந்து சென்றது. அதனைக் கண்ணுற்ற அமைச்சராகிய குலச்சிறையார் காற்றெனக் கடிது செல்லும் கடும்பரி ஒன்றில் ஏறி விரைந்தார். அவ் ஏட் டினை அமைச்சர் பற்றித் தாங்கி வருமாறு இறைவன் தண்ணருள் வேண்டிச் சம்பந்தர் புண்ணியப் பதிகம் பாடியருளினர். அரசன் உடற்கூன் ஒழிதல் சம்பந்தர் வைகையில் இட்ட ஏட்டில் எழுதியரு ளிய பாட்டில் வேந்தனும் ஓங்குக!' என்று வாழ்த் தினராதலின் திடீரெனப் பாண்டியன் உடற்கூன் மறைந்தது. அவன் நின்றசீர் நெடுமாறனுகக் காட்சி யளித்தான். இங்ங்னம் மன்னன் அறிவுக் கூனை அகற் றிய தோடன்றி ஞானசம்பந்தர் திருவருளின் துணை யால் உடற் கூனும் மறையுமாறு செய்த மதியமைச்சர் குலச் சிறையாரின் கூர்த்த மதிவன்மையை என் னென்பது பரசமயம் புகுந்த மன்னனைப் பக்குவமாகத் தக்க சமயத்தில் அறிவுறுத்தி, அவனையும் பாண்டி நாட்டையும் நன்னெறிச் செலுத்திய அன்னவரின் நுண்ணறி வைஞானசம்பந்தரே வியந்து போற்றி ரைன்ருே !