பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதவூார் 79 டருள வேண்டும்,' என்று உள்ளமும் ஊனும் உருக வும், கண்கள் ஆனந்தக் கண்ணிரைச் சொரியவும், உடம்பு மயிர்க்கூச் செறியவும் வணங்கி நின்று வேண் டிர்ை. உபதேசம் பெறுதல் அமைச்சராகிய வாதவூரரின் அதிதீவிர பக்குவ நிலையைக் கண்ட பெருமான் திருவருள் கூர்ந்து, கரத் தால் தீண்டியும் திருவடி சூட்டியும் சிவஞான போத நுண்பொருளைச் செவியில் தெளிவுறுத்தியருளினர். பின்னர், இருவினைப் பாசத்தால் மும்மலக் கற்களுடன் கட்டப் பெற்றுப் பிறவிக் கடலில் வீழ்ந்த மக்கள் பேரின் பக் கரையில் ஏறுதற்கு அருளும் அஞ்செழுத்தினை அனுபவ நிலையில் உபதேசித்து மறைந்தருளினர். குருபரன் திருவுள்ளக் குறிப்பின்படியே தாம் குதிரை வாங்குதற்குக் கொண்டு வந்த நிதியத்தையெல்லாம் சிவனடியார்க்கும் திருக்கோவிற் பணிக்குமாகச் செலவு செய்தார். இறைவன் அருளமுதைப் பருகியவாறே திருப்பெருந் துறையில் பன்னுள் தங்கிவிட்டார். அரசன் செய்தி அறிதல் பாண்டியன், குதிரை வாங்கச் சென்ற மதியமைச் சரைக் காணுேமே என்று, செய்தி அறிந்து வருமாறு ஆட்களை அனுப்பின்ை. ஏவலாளர்கள் திருப்பெருந் துறை அடைந்து அமைச்சரது நிலையை நேரில் கண்டு சென்றனர். அரசன்பால் அவரது நிலையை விளக் கினர். அவன் மனத்தில் சினங்கொண்டு மதியமைச்ச ரைத் திரும்பி வருமாறு ஒலையனுப்பினன். அது கண்ட வாதவூரர் திருப்பெருந்துறைத் திருக்கோவிலுட்