பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய அமைச்சர்கள் اسسسسسيم يجسسسسسس க. இலக்கியத்தில் அமைச்சர்கள் மன்னரைப் பற்றிய பன்னூல்கள் உயர்தனிச் செம்மொழியாகிய நந்தம் செந்தமிழ் மொழிக்கண் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையான இலக்கியங்கள் பல உள்ளன. அவற்றுள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பழந்தமிழ் நூல்களில் தமிழகத்தை ஆண்ட முடிமன்னர்களாகிய சேர சோழ பாண்டியரைப் பற்றிப் பற்பல செய்திகளைத் தெரிகின்ருேம். தமிழில் தோன்றிய முதற் பெருங் காவியமாகிய நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரத்தில் முடிமன்னர் மூவரைப் பற்றி அறிகின்ருேம். சீத்தலைச் சாத்தளுரின் செந்தமிழ்ப் படைப்பாகிய மணிமேகலைக் காவியத்தில் மாவண்கிள்ளி என்னும் சோழன் ஒரு வனைப் பற்றி உணர்கின்ருேம். சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, இராமாயணம், பாரதம், பெரியபுராணம், நைடதம் போன்ற காவியங்களிலும் பாராண்ட மன்னர் பலரைப் பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. அரசியல் துணைவர் அமைச்சர் இங்ங்னம் காவியம் போற்றும் காவலர் யாவரும் தம் நாட்டை நன்முறையில் ஆளுதற்குத் தக்க துணைவ