பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இலக்கிய அமைச்சர்கள் ஊரில் அமாத்தியப் பிராமணர் என்ற ஒரு வகுப்பினர் உளர் என்று வரலாற்று ஆசிரியர் பேசுவர். இனித் தெலுங்கு நாட்டில் வாழும் பிராமணர்களில் ஒரு பகுதி யினராகிய நியோகி என்ற பிரிவினருக்கு அமாத்தியர் என்று மற்ருெரு பெயரும் வழங்குகிறது என்பர். நியோகி என்ற சொல்லுக்கு அரசியல் அலுவலாளன் என்பது பொருளாகும். இத்தகைய அந்தணர் பல ருள்ளே ஏதேனும் ஒரு வகையினைச் சார்ந்த அமாத்தி யப் பிராமணராகவே வாதவூரர் இருக்கவேண்டும். வாதவூரர் மாணிக்கவாசகராதல் இவருக்கு மாணிக்கவாசகர் என்ற திருப்பெயர் இறைவல்ை அருளப்பெற்றதாகும். திருப்பெருந் துறைக் குருந்தமர நீழலில் குரு வடிவாய் வீற்றிருந்த சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற நாளில் சிவனது அநாதி முறைமையான பழைமையினைச் சிவபுராணம் என்னும் செந்தமிழ் அருட்பனுவலாகப் பாடிப் பரவி ஞர். அப்பாடலின் சிறப்பைக் கண்ட சிவபிரான், : நின் பாடலிலுள்ள ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்க முடியாத வியத்தகுமாணிக்கமாகும்; மாணிக்கம் போன்ற வாசகங்களை நேசத்தால் நெஞ்சுருகப் பாடும் நீ மாணிக்க வாசகய்ை மாநிலத்து மன்னுக!' என்று வாழ்த்தியருளினர். அதல்ை மாணிக்கவாசகன் என்னும் திருப்பெயரை வாதவூரர் பெறுவாராயினர். வாதவூரர் அன்பு வடிவம் மாணிக்கவாசகர் இறைவன் திருவருள் அமு தத்தை நிறைய உண்டு, சிவாதுபவச் செல்வராக விளங்கினர். அந்நிலையில் யான் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெற்றுய்ய வேண்டும் என்ற பேரருள்