பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

125 முதுகண்ணாகவுடைய இப்பொன்னார் மேனி பட்டன் மாதா உமையாண்டாளும்'1 எனவும், 'இவனையே முதுகண்ணாக வுடைய இவன் பேரன் சொக்கன் - ஆராவமுதும்' 2 எனவும் போ தரும் கல்வெட்டுத் தொடர்களால் உணரலாம். இந்நாளில் அத்தகையார் கார்டியன்' என்றும் 'போஷகர்' என்றும் வழங்கப்படுகின்றனர். அவற்றுள் 'கார்டியன்' ஆங்கில மொழியிலிருந்து வந்து வழங்கும் திசைச் சொல்; "போஷகர்' என்பது வடசொல். -ஆகவே இச்சொல்லின் பொருளை யுணர்த்துவதாய் முற்காலத்தில் நம் நாட்டில் வழங்கி வந்தது முதுகண் ஆகும். எனவே, பிறர்க்கு முது கண்ணாக இருப்பவன் முதுகண்ணன் என்பது வெளிப்படை. 2. மண்டை : சங்க காலத்தில் பாகமார்களிடத்தி லிருந்த ஒருவகை உண்கலம் மண்டை என்ற பெயருடைய தாயிருந்தது என்பது புறநானூற்றிலுள்ள பல செய்யுட் கனரல் அறியப்படுகின்றது. 3 தஞ்சைமா நகரில் இராச ராசேச்சுரம் என்ற பெருங்கோயிலை எடுப்பித்த முதல் இராசராச சோழலும் அவன் உரிமைச் சுற்றத்தினரும் அக் கோயிலுக்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய் தனித்த தலங்களுள் மண்டைகளும் உள்ளன என்பது, 'நாதினாலே கொடுத்த பொன்னின் மண்டை ஒன்று, மேற்படி கல்லால் திறை முந்நூற்றுத் தொண்ணூற் சொன்பதின் கழஞ்சே முக்கால்' 4 மண்டை ஒன்று வெள்ளி இரு நூற்றிருபத்தேழு கழஞ்சு 5 என்ற அக்கோயிற் கல் வெட்டுப் பகுதிகனால் புலனாகின்றது. எனவே, கி. பி. 11 1. S. 1. 1. Vol. V. No. 649. 2. do. VI. No. 4. 3. பருக்: 103, 115, 384, 398. 4. S.1.1. Vol. II. No. 2 5. S. 1. I. Vol. II. No. 91.