பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 கூறியுள்ளார். இம்முனிவரே, அரிமாத்தனபாண்டியனி டத்தில் திருவாதவூரர் அமைச்சராயிருந்தனர் என்று ணர்த்தியுள்ளார். சுந்தர பாண்டியற்குப் பத்துத்தலை முறைகட்கு முந்தியவன் அரிமர்த்தனபாண்டியன் என்பது அத்திருவின்யாடற் புராணத்தால் அறியக்கிடக்கின்றது, இவ்வரிமர்த்தன பாண்டியற்கு நாற்பத்து மூன்று தலை முறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுண பாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராய சுந்தர மூர்த்திகளும் இவ் வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம் பந்தர் காலத்தினனாகிய சுந்தரபாண்டியற்கு ஐம்பத்து முன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் சுந்தர மூர்த்திகள் காலத்தினனாகச் சொல்லப்படும் வரகுண பாண்டியன் என்பது, திருவிகாயாடற் புராணமுடையாரது முடியாகும். தலைமுறை ஒன்றிற்கு முப்பது ஆண்டு கனாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடுவதுதான் பொருத்தமுடைத்து என்று வரலாற்றுதுல் வல்லார் கூறுகின் றனர். எனவே, சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தருக்கு 1590 ஆண்டுகட்கு முன்னர் இந்நில வுலகில் வாழ்ந்தவர் என்பது திருவிளையாடற் புராணத் தால் அறியக்கிடக்கும் செய்தியாகும். திருஞான சம்பந்தர் திருக்கோலக்கா விற் பொற் நலம் பெற்றதையும்1, திருவீழி மிழலையில் படிக்காசு 1 நாளுமின்னிசை யாற்றமிழ்பரப்பு ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளமீத்தவன் பாடலுக்கிரங்குத் தன்மையாளன யென்மனக் கருத்தை யாளும் பூதங்கள் பாடதின்றாடும் அங்கணன்றனை பெண்கணமிறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயில் உள்ளானைக் கோலக்காவினிற் கண்டுகொண்டேனே. --திருக்கோலக்கா, 8.