பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 பெண்களா மலையற் குதவிப் பெண்ணை அலைபுன வழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பிள் வீடுபே றெண்ணிக் கனல்புகுல் கபிலக்கல்லது புனல்வளர் பேரேட் டான வீரட் டானம் அனைத்திலு மநாதி யாயது' என்ப தாம். (S. I. I Vol. VII, No. 863.) 2. கி. பி. 1216 முதல் 1238 முடிய மதுரைமா நகரில் வீற்றிருந்து பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்த முதல் மாற வர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்று, கடியலூர் உருத்திரங் கண்ணனாரையும் அப் புலவர் பிரான் சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பாடிய பட்டினப்பா வேயையும் குறிப்பிடுவது அறியத்தக்கதொன்றாம். திருவெள்ளரையில் கட்டளைக்கலித்துறையாகவுள்ள அக் கல்வெட்டு, வெறியார் தளவத் தொடை செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று தெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின் றனவே' (செந்தமிழ்-தொ. 41, பக். 215) என்பது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1216-ல் சோமுதாட்டின் மேல் படையெடுத்துத் தஞ்சையும் உறந் ைேதயும் செந்தழல் கொளுத்தி, மாடமாளிகைகளையும், ஆடரங்குகளையும், மணிமண்டபங்களையும் இடித்து அழித் தனன் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.