பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

141 தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூருயியம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கினான். -அப் புலவர் பிரான் அரியணையை ஏற்றுக்கொள்ளாமல், 'தீ அரசு வீற்றிருந்தாளுக' என்று கூறி, இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர். இளஞ்சேர விரும்பொறை, பெருங்குன் நூர் கிழார்க்கு முப்பத்திரர்யிரம் பொற்காசும், அவர் அறியாமல் பாரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210, 211 ஆம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப்பாடிய பெருங்குன்னூர் கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங்கொடாமல் அனுப்பிவிட்டான் என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச்செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய பாரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கையினராக இவ் வேந்தன் அனுப்பி யிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரை நடைப்பகு தியால் உறுதியெய்துதல் அறியத்தக்கது. இதுகாறும் கூறியவாற்றால், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர்களின் வரையா வண்மையும் அன்னார் புலவர் பெருமக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலருதல் காண்க. இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேர நாட்டில் ஆங்