பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

149 கோனைச்சிறப்பித்துக் கூறும் இந்த உலாவும் அச்சோழ மன்னனது ஆட்சியின் ஆகும் ஆண்டிற்கு முன்னரே பாடப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். விக்கிரமசோழன் சி. பி. 1118 முதல் 1136 முடிய பதினெட்டு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது கல் வெட்டுக்களால் அறியப்படும் செய்தியாகும். எனவே, விக்கிரம சோழனது ஆட்சியின் ஆரும் ஆண்டாகிய கி. பி. 1124-க்கு முன்னரே விக்கிரமசோழனுலா இயற்றப் பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும் இனி, அத்தலைவர் களோப் பற்றிய செய்திகளை ஆராய் வோம். | 1. தொண்டைமான் :- இவன் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமானே யாவன் என்பது 'பரணி மலேயத் தருந்தொண்டைமான்' என்ற சொற்றொடர் களால் பெறப்படுகின்றது. இவன் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையிலிருந்து விலகியிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படுகின்றது. விக்கிரம சோழனது ஆட்சியில் அமைச்சுரிமை பூண்டு அரசியல் நடத்திவந்த தலைவர்களைக் கூறத் தொடங்கிய கவிஞர் பெருமான், கருணாகரத் தொண்டைமானை முதலில் தனியாக வைத்துப் பாராட்டியிருப்பது ஆராய்தற்குரிய தாரும். ஆகவே, இந்நாளில் ஐம்பத்தைந்து ஆண்டு களுக்குப் பின்னர் அரசாங்க அலுவல்களினின்றும் நீங்கி ஓய்வு பெற்றிருப்பாரைப்போல் இக் கருணாகரத் தொண்டை மானும் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையினின்றும் விலகி ஓய்வுற்ற நிலையில் இருந் திருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது. இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சிறந்த தலைவருக