பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இங்கனமே மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரத் தில் இவனெடுப்பித்த இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற திருக்கோயிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலி லுள்ள கல்வெட்டும் இவனைச் சிவசூடாமணி' என்று புகழ்தல் ஈண்டு அறியத் தக்கது. காசாக்குடிச் செப் பேடுகள் பரமேச்சுரனே இராசசிங்கப்பல்லவனாக அவத சித்துள்ளா ரென்று சிறப்பித்துக் கூறுகின்றன. (S. I. 1. Volume II No. 73, உதயேந்திரஞ் செப்பேடுகள் இவ இனப் பரமமா கேச்சுர' னென்று புகழ்ந்துரைக்கின்றன. (S. 1. 1. Volume II No. 74), வேலூர்ப்பாணையம் செப் பேடுகள் இவன் சிவபெருமானுக்குக் காஞ்சி மாநகரில் கைலாயத்தை யொத்த திருக்கோயிலொன்றை எடுப் பித்த பெருமையுடையவன் என்றுணர்த்துகின்றன, [S. 1.1. Volume ll No. 98). இக் கைலாயநாதர் திருக் கோயிலில் நரசிங்கவர்மனுக்கு அந்நாளில் வழங்கிய இரு நூற்றைம்பது பட்டங்கள் பொறிக்கப்பட்டிருத்தலை இன் றும் காணலாம். அவற்றுள், 'சங்கரபக்தன்', 'ஈசுவர பக்தன்', ஆகிய பட்டங்கள் இவ்வேந்தன் சிறந்த சிவ பத்தியுடையவளுய்த் திகழ்ந்தனன் என்பதை நன்கு விளக்குகின் றன. [S. I, I. Volume I No. 25 Verse 55], பல்லவர் சரித்திரம் எழுதிய அறிஞராகிய துப்ரே துரைமகனார் இவ்வரசனைப்பற்றிக் கூறுவது-ாநெடுங் காயம் குடிகளை எவ்வகை இன்னல்களுமின்றிக் காத்துவந்த பல்லவ அரசன் இவன் ஒருவனேயாவன், இவன் தன் ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் கைலாய நாதர் கோயிலை யும் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் விழுப் புரந் தாலூகாவிலுள்ள பனைமலையில் ஒரு கோயிலையும் எடுப்பித்துச் சிவனடியார்களைப் போற்றி அன்தேர்க்குப்