பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கம்பர் காலம் இராமாயணப் பிரதிகளில் ஒரு தனிப்பாடல் காணப் படுகிறது. எண்ணிய சகாத்தம் எண்பற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு நண்ணிய வெண்பொய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குளி அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்ளே கவியரங் கேற்றி ஞாளே. என்பதாகும். இத்தகைய பாடயே வைணவர்கள் தனியன் என்று வழங்குவர், இப்பாட்டில் சகம் 807-ஆம் ஆண்டில் இராமாயணம் கம்பரால் அரங்கேற்றப்பெற் றது என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே கி. பி. 885-ல் இவ்வரங்கேற்றம் நடைபெற்றதாதல் வேண்டும், இக்காலத்தை ஏற்றுக்கொள்வதற்கு இப்பாடலைத் தக்க ஆதாரமாகக் கொள்ள முடியவில்லை, கம்பரைக் குறிக்கு மிடத்து இப்பாடல் கம்ப நாடன்" என்று கூறுகின் றது. ஓவரை இராமாயணத் தனியன்களில் ஒன்று