பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்பது தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரந்தா லூகாவி லுள்ள உடையார்குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால் | அறியப்படுகின்றது. எனவே, அவ்வரசிளங்கோ தன் இளமைப்பருவத்திற் கொலையுண்டிறந்தமை தென்னிது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து சிவ லோகமெய்தினான் என்று கூறுவதற்குச் சிறிதும் இட மில்லை. இந்நிலையில், சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்த தாக நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவத் தாதியிற் குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற்பராந்தகசோழன் தந்தையும் கி. பி. 870 முதல் 907 வரையில் சோழமண்டலத்தை ஆட்சிபுரித்த பெருவேந்தனுமாகிய முதல் ஆதித்த சோழனேயாவன், இவன் பல்லவ அரசருகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிய காரணம்பற்றித் தொண்டை நாடுபரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனாயின ராசகேசரிவர் மன்2' என்று வழங்கப்பெற்றுள்ளனன், இவன் ஆட்சி யிலேதான் சோழராச்சியம் உயர் நிலையை எய்தியது. இவன் கொங்குநாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக்கொண்டான் என்று 'கொங்குதேச ராஜாக்கள்' என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது , ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய இம்மன்னர் பிரான் 4 அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் 1 Epigraphia Indica, Vol. XXI. No. 27, z South Indian Inscriptions. Vol. II. No. 89. 3 செந்தமிழ் தொகுதி 16, பக், 394. 4 முதற்பராந்தகன் கல்வெட்டுக்கள் கொங்குநாட்டிற் காணப்படுதலாலும் அவன் அதனைக் கைப்பற்றியதாகக் கூதிக் கொள்ளாமையாலும் அத்தாடு அவன் தந்தை முதல் ஆதித்த ளும் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்,