பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள்வரைப் பென்னும் இயைபு பற்றி என்பது' என்று கூறியுள்ளனர், இதனால், அகத்தியர் குன்றமெறிந்த குமரவேளிடத்தும் ஒரு காலத்தில் தமிழ் இலக்கணம் கற்றிருத்தல் வேண்டும் என்பது அறியக் கிடக்கின்றது. பழனித்தல புராணமும் இதனை வலியுறுத்தல் காண்க. 'பொத்த சமயத்தினரான பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் என்பார், தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தில் அகத்தியர் அவலோகி தன்பால் தமிழ் கேட்டனர் என்று கூறியுள்ளனர். ' அச்செய்தியை 4ஆயுங் குணத்தவு லோகிதன் பக்கல் அகத்தியன்கேட் டேயும் புவனிக் கியிம்பிய தண்டமிழ்" என்ற பாடற் பகுதியால் நன்கறியலாம். இவற்றால் அகத்தியர்க்குத் தமிழறிவுறுத்திய ஆசிரியர் யாவர் என்பதுபற்றி நம் தமிழ் நாட்டில் அக் காலத்தில் வழங்கிய சில செய்திகள் வெளியாதல் காண்க. 3. அகத்தியனாரின் இல்லக்கிழத்தியாரும் புதல்வரும். - அகத்தியரின் மனைவியார் உலோபாமுத்திரையார் ஆவர். இவ்வம்மையார் புலத்திய முனிவரின் தங்கையார் என்றும் அவர் கொடுப்ப, இவர் தமிழ்நாடு போ தருங்கால் மணம் புரிந்துகொண்டு வந்தனர் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளமை மூன்னர் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. கந்தபுராணத்துள் அகத்தியப் படலத்தில் இவ்வுலோபாமுத்திரையார் விதர்ப்ப நாட்டு மன்னன் ஒருவனுடைய புதல்வியார் என்று சொல்லப்பட்