பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மலைய மலையில் தங்கியிருந்த காலத்தில் காந்தன் என்ற ஒரு சோழமன்னன் வேண்டிக்கொண்டவாறு இம்முனிவரது அரும்பெரு முயற்சியினால் தான் வெட்டப்பெற்றது என்பது அறியற்பாலதாம். அகத்தியர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு வந்தார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருப்பது இவ்வரலாற்றையே குறிப்பாக உணர்த்துவதோடு தென்னாட்டில் ஒடுங் காவிரியாறு வடநாட்டிலுள்ள கங்கையைப்போல் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை உறுதிப் படுத்துவதும் ஆகும். அன்றியும் புலவர் பெருமானாகிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தாம் இயற்றிய மணிமேகலையில், "செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமள் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை," என்று இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடக் சடறியுள்ளமை நோக்கத் தக்கது. எனினும், அகத்திய முனிவர்க்கும் காவிரியாற்றிற்கு முன்ள தொடர்பை அவ்வாசிரியர் எடுத்துரைத்திருப்பது நினைவில் வைத்தற்குரியது. பிறகு, இம்முனிவர் பெருமான் பாண்டிநாடு சென்று பாண்டி வேந்தர்க்குக் குலகுருவாக அமர்ந்தனர். இச் செய்தி, கி. பி. பத்தாம் நூற்ருண்டில் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் வரையப்பெற்ற சின்னமனூர்ச் செப்பேடுகளின் வடமொழிப் பகுதியில் 'அகஸ்த்ய சிஷ்ய:' என்றும், தமிழ்ப் பகுதியில் 'பொரு வருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது' என்றும் குறிக்கப்பட்டுள்ள வற்றல் நன்கு வெளியாகின்றது.