பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் தொல்காப்பியம் என்னும் பண்டைத் தமிழிலக்கணத் திற்கு நல்லுரைகண்ட தொல்லாசிரியராகிய இளம்பூரண அடிகளின் அருமை பெருமைகளைப் புலவர் பெருமக்கள் நன் கறிவர். இவ்வடிகள், தொல்காப்பியமாகிய கருவூலத்துன் முதலிற் புகுந்து பண்டைத் தமிழ் மக்களின் வழக்க ஒழுக்க நாகரிகங்களாகிய அரும்பெறன் மணிகளே நம்மனோர்க்கு வழங்கிய பெரியார் ஆவர். சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், அடியார்க்கு நல்லார் ஆகிய மற்ற உரையாசிரியன்மாரெல்லாம் இவரது பெருமையினை நன்குணர்ந்து இவர்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தனர் என்பது அவர்கள் உரைகளால் இனிது அறியக்கிடக்கின்றது, அத்துணைப் பெருமையும் ஆற்ற லும் வாய்ந்த இவ்வடிகள், தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளுக்கு ஓர் உரையும் கொங்குவேளிரால் இயற்றப்பெற்ற பெருங்கதைக்கு ஒரு குறிப்புரையும் எழுதியுள்ளனர் என்பது இவரது உரைப்பாயிரச் செய்யுள் ஒன்றால் புலகுகின்றது. அது,