பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவாரம் என்னும் பெயர் வழக்கு சைவசமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடி யருளிய திருப்பாடல்கள் இக்காலத்தில் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன. பத்து அல்லது பதினொருபாடல் களைக்கெண்ட அவர்களுடைய பதிகங்களும் தேவாரப்பதி கங்கள் என்று கடறப்படுகின்றன. ஆனால் தேவாரம் என்ற பெயரை மூவர் பாடல்கள் எப்போது பெற்றன என்பதும், அவை அப்பெயர் எய்தியமைக்குக் காரணம் யாது என்பதும் இதுகாறும் ஆராய்ந்தறியப்படவில்லை. எனினும், தேவாரம் என்பதன் பொருள் யாது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. அது, தே-வாரம் என இருமொழிகளாகப் பிரிந்து கடவுள் மீது பாடப்பெற்ற சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் என்று பொருள்படும் என்பர் சிலர். அன்ஞோர் இப்பொருளுக்கு 'வாரம் பாடுந் தோமிய மடத்தையும்' என்ற சிலப்பதிகாரவரியை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர். வேறுசிலர், வாரம் என்பது அன்பு எனப் பொருள்படும் என்றும், ஆகவே அத்தொடர் கடவுளிடத்து | ஊர்காண், வரி, 155.