பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமது வெற்றிக்கு அடையாள மாசுத் தாம் வெற்றிபெற்ற நாடுகளில் அழிந்த ஊர்கனி லிருந்து கடவுட் படிமங்கள் கொண்டுவந்து தம் நாட்டில் எழுந்தருளுலிப்பது ஒரு பழைய வழக்கமாகும். இவ்வரிய செய்தி சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. கம்பன் மணியனாகிய விக்கிரம சிங்க மூவேந்த வேளாள் என்னும் சோழநாட்டுப் படைத் தலைவன் சேரமண்டலத்தின் மேற் படையெடுத்துச் சென்று அதனை வென்று திரும்பியபோது, அங்கிருந்து கொணர்ந்த மரகத தேவரை முதல் இராஜ ராஜசோழன் பால் பெற்றுத் திருப்பழனத்திலுள்ள ஆல யத்தில் கி. பி. 999ல் எழுந்தருளுவித்தான் என்று அவ்வூரி ஓரள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.! கங்கைகொண்ட சோழன் மசுளுகிய விஜய ராஜேந்திர சோழன் மேலைச் சளுக்கியாது நகரமாகிய கலியாண புரத்தை வென்று அங்கிருந்து துவார பாலகர் படிமம் ஒன்று கொண்டு வந்துள்ளானென்பது, கும்பகோணத் திற்கு அண்மையிலுள்ள தாராசுரம் (இராஜராஜபுரம்) கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. அப்படிமத்தினடியில், 'கலியாணபுரம் எறிந்து உடையார் விஜய ராஜேந்திர சோழதேவர் கொடுவந்த துவாரபாலகர்' என்று வரையப்பெற்றுள்ளது. பேரழகு வாய்ந்த அப் படிமம் முன்று ஆண்டுகட்கு முன்னர்த் தாராசுரம் கோயிலி விருத்து, தஞ்சை அரண்மனை ஆலயக் கண்காணிப் பரளரும் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சருமான திரு வானர். M. சோமசுந்தரம் பிள்ளையவர்களால் தஞ்சைக்குக் கொண்டுபோகப் பெற்றுப் பெரியகோயிலிலுள்ள சோழர் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப்பெற்றுள்ளது. | Inscriptions No. 135 of 1927-28.