பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் ##3 தொடர்பைத் தோற்றுவித்துக் கற்பனை இன்பத்தை மிகுவிக்கின்றது." . இதன் உண்மையைச் சங்கச் செய்யுட் களுடன் தொடர்புபடுத்திக் காட்டுக. பெரும் புலவர்கள், காலத்திற்கும் மொழிக்கும் கட்டுப்படாது அவை இரண்டையும் தம் வயப்படுத்துவர் என்பதைக் கம்பரைக்கொண்டு புலப்படுத்துக, புதினத்திற்கும், நாடகத்திற்கும் இடையே காணப் படும் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக. 1969 Section III "கல்வியே கற்புடைப் பெண்டிர். அப்பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே தீங்கவியாம்';-இங்கே தீங்கவியைச் செல்வப் புதல்வன் என்ற கருத்தைச் சான்ருேர் ஒருவருடைய புலமை வாழ்வில் எடுத்துக்காட்டி கிறுவுக. பெருங்காப்பியங்கள் பற்றி ஆங்கிலப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களும் கூறும் இலக்கணங்கள் யாவை? ஒற்றுமை வேற்றுமைகட்குக் காரணம் கூறுக “The function of poetry is not to systematize the actual or to direct action but to present itself or its meaning for contemplation.’ இவ்வுண்மையைத் திருவள்ளுவரையோ திருவாதவூரரையோ துணைப்பற்றி விளக்குக. “The mirror of drama and fiction should be a conceptrating mirror which makes of a mere gleam a light and of light a fame. நீங்கள் படித்த புதினங்களில் ஒன்றும் நாடகங்களில் ஒன்றும் கொண்டு இக்கருத்தை விளக்குக. 3