பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இலக்கிய இயல்: அறிவியலாளியும் மனிதனே. அவன் வெறும் இயந்திரம் அன்று. எனவே, அறிவியலாளியின் அறிவியல் முயற்சிகளிலும் உணர்வுந்தல் இருத்தல் இயற்கை இன்றி யமையாததும் கூட. ஆனால், அது பங்தை வீசும் கை போன்றதே. பந்து அன்று. ஆனால், உணர்வியலாளியின் கலே முயற்சிகள் பந்தை வீசும் கை போன்ற நிலையில் இல்லை; அபிநயம் செய்யும் அழகிய கை போன்றதே. இதன் பயணுக அறிவியல் முயற்சிகளில் உணர்வுப் பகுதிகளேத் தேடுவது உதவாது என்பதும், உணர்வியல் கலேகளில் அறிவியல் பகுதிகளையும் ஆராய்வது உதவும் என்பதும் அறிந்துணரப்படும். வேறு சொற்களால்உணர்வியல் உயிருள்ள உடல்; அறிவியல் உயிரற்ற உடல், உணர்வுதானே உயிர், அறிஞர் சிலர்க்கு வேம்பான அவ்வுண்மை கலைஞர்க்குக் கரும்பான உண்மை கரும்பான உண்மையாயினும் அக்கரும்பைப் பிழிந்து சாறெடுத்துப் பயன்படுத்துவது செயற்கருஞ் செயலாகும். திருக்குறள் போன்ற நூலுக்கு இன்னும் உரையாசிரியர்களாம் திறனுய்வாளர்கள் தோன்றிக் கொண்டிருப்பதால் இவ்: வுண்மை மலைமேல் மணி விளக்காகும். இதன் காரண மாகவே இலக்கிய இயலையும் அதனுள் அடங்கும் இலக்கியத் திறனுய்வியலையும் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளது. 器 உயிருள்ளன, உயிரில்லனவற்றினும் உயர்ந்தவை என் பதையும் உயிருள்ளனவற்றுள்ளும் ஆறறிவு படைத்த மனிதன் அனைத்துயிரினும் சிறந்தவன் என்பதும் தொன்று தொட்டு இன்றுவரை எவரும் ஒப்பிய ஒன்ருகும். இத்தகு சிறப்பு வாய்ந்த மனிதனின் அடிப்படைக் கூறுகள் யாவை?