பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திலக்கணத் தமிழ் . 37 வில்லை. இதனால், இலக்கியத் திறனுய்விற்கு அரிஸ்டாட்டி -லின் கருத்துகள் அமர்க்களப் படுத்தப்படுவது போல வேறு எந்த இந்தியச் சான்றும் கூட மேற்கோளாக மேற் கொள்ளப்படுவதில்லை. இனியேனும் தொல்காப்பியர் போன்ருர் இலக்கியத் திறனய்வுக்குச் செய்துள்ள பெருந்தொண்டு முதலில் தமிழர்களாலேயே முழுதுமாக ஆராயப்பட்டுப் பின்னர் ஆங்கிலம் முதலிய பிற மொழிகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேணடும். இதனால், ஏற்படக் கூடிய தலையாய பயன் ஒன்றை மட்டும் ஈண்டுக் கருதுவோம். வடமொழி இலக்கணிகளும் பழமையாகவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் வகுத்திருக்க முந்துநூல் கண்டு முறைப்பட புலம் தொகுத்த தொல்காப்பியர் மட்டும் பொருள் இலக்கணம் என்ற ஒன்று தனியாகச் செய்வானேன்? இவ்வின ஆழ்ந்து கருதி விடையிறுக்கத் தக்கது. இதற்கு உறுதுணை செய்ய வல்லது பின்வரும் எளிய விளக்கப்படம். ក្ញុំ இப்படி ஒரு வரைபடம் வாயிலாக இக் கரு காணும் போதே எழுத்தினும் சொல்லினு