பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திலக்கணத் தமிழ் 39 மொழி இலக்கணத்துக்கு நடுநாயகமாகச் சொல் இருப்பது போலவே வாழ்விலக்கணத்துக்குப் பொருள் இருப்பது பொருத்தமும் பயனும் உடையதே ஆகும். 2 எழுத்து என்றதும் பெரும்பாலோர்க்கு ஏற்படும் எண்ணம் அவை பற்றிய வரைவடிவமே. ஆனால், உண்மை யில் ஒலி வடிவத்தின் புற அறிகுறியே அதுவாகும். இவ் வுண்மையில் தெளிவில்லாதார்க்குப் பல குழப்பங்கள் ஏற்படல் தெளிவு, இனி எழுத்து தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் சொல்லாகும் செய்தி காம் ஆழ்ந்து கருதற் குரியது. இதல்ை எழுத்தும் சொல்லும் பொருளின்றேல் பயனற்றும்-பெயரற்றும்-போகும் என்பது வெளிப் படை. இவ்வாறே அறமும் அறவழிப்பட்ட பொருளும் இன்பம் பயவாவிடில் துன்பமே என்பது உறுதி. . இதனலேயே போலும் காதலின்பமும் கடவுள் இன்பமாக மடைமாற்றம் செய்யப்பட்டது. இனி, ஈண்டுச் சிறப்பாய் எண்ணத்தக்கது இலக்கியத் திறய்ைவு உலகம் எவ்வளவு பெருமளவில் தொல்காப்பிய ருக்குக் கடன் பட்டுள்ளது என்பதே ஆகும். வடமொழி உட்பட வேறு எந்தப் பழமை வாய்ந்த உலக மொழி. களிலும் பொருளுக்கென்று தனி இலக்கணம் இல்லை. தொல்காப்பியர் பொருள் என்றது எதை வாழ்க்கையை யும் அதை எண்ணப்படுத்தி, வண் இலக்கியத்தையுமே ஆகும்.