பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இலக்கிய இயல் பொருளதிகாரத்தைப் பின்வரும் விளக்கப்பட வாயிலாக விளக்கலாம் : தொல்-பொருள் f ! i |- . வாழ்க்கை இலக்கியம் f } | T i | i | i அகம் புறம் யாப்பு உவமை மெய்ப் மரபு | (செய்யுள்) பாடு H i களவு கற்பு பொருள் இவ்வாறு எழுத்தின்-சொல்லின் பயனுக விளங்கும் பொருள், வாழ்க்கை எனத் தெரிந்து அவ்வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியரினும் தொன்மை யானவர் வேறு யார்? அதிலும் அவரைப் போலப் பொருள் என்பது வாழ்க்கையும் அதன் சிறந்த விளைவாகிய இலக்கியமும் என்று எண்ணிப் பார்த்து இலக்கணம் செய்தவர் யார்? தொல்காப்பியர் காட்டிய இத்தெளிவை கினைக்கும் போதெல்லாம் திரு. மு. அருணுசலம் அவர்கள் எழுதிய நூலொன்றுக்குத் தமிழ். முனிவர் திரு. வி. க. அவர்கள் தந்த அணிந்துரையில் தமிழ் என்ருல் என்ன? அது வெறும் எழுத்தா ? அன்று; சொல்லா? அன்று வாழ்க்கை வாழ்க்கை!" என்று எழுதியது கினேவுக்கு வருகிறது. இவ்வாழ்க்கையைக் கண்டு காட்டுவதே இலக்கியம். அதை அறிவதற்கே ஐவகை இலக்கணம். ஏனைய உலக