பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இலக்கிய இயல் (உ) அறவியல்

i ஒழுக்கம் சமயம் மெய்ப்பொருள் {Ethics) (Religion) (Philosophy) | | தெய்வம் கோவில் விழா ४४ | . ! | | இ! இrது இலக்கியம் பிற கலைகள் இவ்வரைபடம் உரைக்கும் வகைகள் ஆழ்ந்து ஆசாயத் தக்கன. ஒழுக்கம் ஒரு சமயத்துள் மட்டும் சிறைப்படாத பொதுமைச் சிறப்புடையதாகும். சமயம் அப்பொது ஒழுக்கத்தைச் சிறப்பொழுக்க மாக்கும். செழுமை-கொழுமை படைத்ததாகும். மெய்ப்பொருள், ஒழுக்க-சமய நிலைகளைக் கடந்து உண்மை கிலைகளையே உணர்த்துவது. ஒருவகையில் ஒழுக்கம், சமயம், மெய்ப் பொருள் ஆகிய மூன்றையும் கடமை-கற்பனே-கருத்து என்ற வாய்ப்பாட்டால் வடித்துக் காட்டலாம். ஒழுக்கம்-சமயம்-மெய்ப்பொருள் ஆகிய மூன்றுள் நடுநாயகமாக விளங்கும் சமயம்-தெய்வம், கோயில், விழா என்ற முப்பாகுபாடுகளின் வழி ஆராயத்தக்கது. அவற்றுள்ளும் நடுநாயகமாக விளங்கும் கோவில் வரலாறு, இலக்கியம், பிறகலேகள் என்ற முப்பிரிவுகளால் ஆராயத்தக்கது. இவ்வாராய்ச்சியில் வரலாற்றுக் கண் கொண்டு கானும்போது கோவிலேப் பற்றிய வரலாறும் கோவிலால் விளங்கும் சமூகப் பொருள் பற்றிய அக்னத்துச் செய்திகளும் கிடைக்கும். அவ்வாறே காலக் தோறும் கோவிலே மையமாகக் கொண்டு வளர்ந்த