பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 54 இலக்கிய இயல் 4. இனி, அறம் பற்றியும் பொருள் பற்றியும் சில அடிப் படைக் குறிப்பு வகைகளைக் காணலாம்.

  • ! . . . அறவுரைகள் அற அமைபபுகள {{deas) (Institutions)

இல்விரு வகைப் பாகுபாட்டுள் அறத்தையும் அதன் வினேவுகளாகிய சமயம், மெய்ப்பொருள் தெளிவு ஆகியன பற்றியும் எழுந்துள்ள எண்ணங்கள் எல்லாவற்றையும் பாகுபடுத்திவிடல் எளிது. இனி பொருள் பற்றிய ஆய்வுகட்கு அடிப்படைகள் அமைப்போம். பொருளுக்கு உரியோர் யார்? அதைப் படைப்டோராகிய மக்களே. (ஆம். படைப்போர் என்பதிலேயே படையும் போரும் வந்து விடுகிறதே! என்ன வாழ்க்கை இது சரி, இருக்கட்டும்; அதைக் கடைசி யில் பார்ப்போம்). பொருளைப் படைப்போர் என்னும் மக்களே இரு கூருக்கலாம்-ஆள்வோர், ஆளப்படுவோர் என்று. அன்றும் இன்றும் என்றும் அடிப்படையிலேனும் ஆள்வோர் எல்லாம் ஆளப்படுவோரே, ஆளப்படுவோர் எல்லாம் ஆள்வோரே! ஆளப்படுவோர் எனப்படுவோரிடம் அதிகாரம் பெற்றவரே "ஆள்வோர், அன்றும்-இன்றும்என்றும் இதை இரு சாராரும் இமைப் பொழுதும் மறத்த லாகாது. மறப்பதாலேயே மன்னராட்சியும் மக்கள் ஆட்சி யும் சிறப்பதில்லை: இறப்பதும் உண்டு ஆல்ை, நெல்லும் உயிரன்றே என்று தொடங்கும் புறப்பாட்டும், சடையன் தந்த முடியே சானகிராமன் குடிய முடி என்னும் கம்பன்