பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமை-பெருமை-பொதுமை-பொருண்மை 63 தாக மனித மனத்துக்கு இருப்பதாலேயே அது உயர்ந்த பழமையினும் தாழ்ந்த புதுமையை நாடுவதைப் பெரும் பாலோரிடம்-பெரும்பாலான நேரங்களில்- காண்கி ருேம். ஆம். செயலில் முடியாவிட்டாலும் சிக்தனையில்: வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இந்தப் பெரும் பான்மை விதியை வெல்லுவோரே விழுப்புகத் வீரராவர். அவர் வகையாலும் தொகையாலும் சிலரே. காரணம் ? இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் கோலா தவர் (திருக்குறள்-270) 2 இனி இலக்கியம் என்று நாம் ம தி க்கு ம் மாண்புடையனவற்றிற்கும், .ே த ைவ ப் படும்-மடை மாற்றம் செய்யப்படும்-புதுமை-காம் பி ன் ல்ை விரிவாகப் பார்க்க இருக்கும் உள்ளிட்டிலும் (Content) உருவத்திலும் (Form) எத்தகையதாய் ஏன் ஏழவேண்டும் என்று கருதுவோம். {-}துமை, பெருமை பெய்வதாய், பொதுமை பொதுளி யதாய், பொருண்மை பொருந்தியதாய்ப் பொலிய வேண்டும். பெருமை தராத எதுவும் பெருமைக்கு உரியது அன்று. நெஞ்சை அள்ளும் நீர்மை இலக்கியத் தின் உயிர். ஆனல், அங்கீர்மை சீர்மைக்குப் பயன் படாவிடின் இலக்கியம் இழிந்த இலக்கியமே. இழிந்த இலக்கியத்தை இலக்கியம் என்றே இயம்ப வேண்டா எனவே உள்ளத்தை-தனி மனித உள்ளத்.ை சமுதாய உள்ளத்தையும்-உயர்த்தும் இலக்கியம், பிற பீழை,