பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ, இலக்கிய இயல் இத்தகைய உயர் குறிக்கோள் இலக்கியத்திற்கு இன்றியமையாததா? ஆம். வாழ்க்கைக்கு இன்றியமை யாதது; இலக்கியத்திற்கும் இன்றியமையாததே. 3. புதுமையும் பெருமையும் அவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாய் ஒரு சிலர்க்கே விளங்கும்-பயன்படும்சித்தர் பாடல்களாய் இருப்பதிலும் பெருஞ் சிறப்பில்லேஇலக்கியம் என்ற வகையில். சித்த வைத்தியப் பாடலும் சித்தர் ஞானப் பாடலும் சிலர்க்கே விளங்கும்-சிலரையே விளக்கும். எனவே புதுமையும் பெருமையும் கற்றறிந்த பெரும்பாலோர்க்கு விளங்குவதாயும் இன்பம் வழங்குவ தாயும் இருத்தல் வேண்டும். எவ்வாறு மக்களாட்சி அல்லது சமதர்மத்தின் வெற்றி எவ்வளவு சாதாரணரையும் எவ்வளவோ பெரியவர் ஆக்குவதில் இருக்கிறதோ, அவ்வாறே எந்த இலக்கியமும் உணர்தற்கு அரிதாயினும் ற்கு எளிதாய் இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும் இலக்கியம் ஆகும். உயர்ந்த உண்மைகளே உணர்த்து வதற்கு உருட்டலும் மருட்டலும் தேவை இல்லை! "கடபடம் என்று உருட்டுவதற்கோ கல்வி என்று தாயுமானவர் கேட்டது சரியே. அவர் தாயும் ஆனர்! காந்தி அடிகள் வாழ்க்கையை எல்லோரும் வாழ்வதில்லை. ஆளுல் வாழாத ஒவ்வொருவருக்குமே தெரியும், அது அவரவர்கள் குறையே என்பது, ஒவ்வொருவரால் முடியாதது என்பதும் ஒருவராலுமே முடியாதது என்பதும் வேறு வேருனவை. எனவே, புதுமை வழி-பெருமை கெறி- செல்லும் இலக்கியம் பல்லோர்க்கும் உரியதாய்-பல்லோரையும் உயர்த்துவதாய் அமைய வேண்டும்.