பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wíi யானது என்றே என் உள்ளம் உறுதி கொண்டது. இத்தகைய கலை உத்தியை முதன் முதல் யான் கற்றதும் காதலித்ததும் 1970 ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற கோடை மொழி யியல் - மொழியியல் கோடை - வகுப்பிலேயே! கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளக் கிடைத்த குளிர் தரு’ போன்ற இவ்வரி பட விளக்க முறையை யான் 1970-71 முதல் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைத் தமிழ்க் கூட்டு வகுப்புகளில் கையாளத் தொடங்கிய போது முறுவலும் கண்டேன்: முணுமுணுப்பும் கண்டேன்; கேட்டேன். முன்னதற்குக் காரணம் புத்தறிவார்வம்: பின்னதற்குக் காரணம்...... ...? ஆளுல் ஒரு சில திங்கள் களுக்குள்ளேயே முணுமுணுப்பும் முறுவலாகியது! இப் போதே இலக்கிய இயலையும் அறிவியலாக்கும் புது வழியில் அனைவர்க்கும் அளவிலாக் காதல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் என்பால் பயின்ற முதலணி, முதுகலைத் தமிழ் மாணவர்களிடம் இரண்டாம் ஆண்டின் இறுதி வகுப்பில் யான் வரைந்த வரிப், படங்களை யாரேனும் தொகுத்து உதவுங்கள்’ என்று வேண்டினேன். (காரணம் பல வரிப் படங்களே வகுப்பிலேயே அவ்வப் போதே யான் வரைவது வழக்கம். என் விளக்கவுரைகட்கு வரிப்படங்களே வழி காட்டிகள் ஆகிவிட்டன). என் வேண்டு கோனே ஏற்று மறுவகுப்பிலேயே செல்வி டி. எஸ். சத்தியம் வரிப்படத் தொகுப்பினை எழுதித் தந்தார். அவ்வாறு ஆர்வமுடன் அவர்கள் செய்த அம் முயற்சியிலும் எனக்குப் பேருவகை தந்தது. அவர்களே அத்தொகுப்பிற்கு இட்ட *கோடும் கொள்கையும் என்ற அழகிய பெயரே. நான்பட்ட பாடெல்லாம்-நான் பாட்டும் நன்பட்டிற்காகப் பட்ட பாடெல்லாம் - அவர்கள் தந்த அந்தத் தலைப்பைக் கண்டதும் சான்ருேன் எனக் கேட்டதாயின் நிலையை எனக்குத் தந்தது. ஆம். என் மகளார் என்னைத் *தாய்" ஆக்கினர்கள்! - வரிப்பட வழியில் என்னினும் ஆர்வம் கொண்ட இன்ஞெரு முதலணி முதுகலைத் தமிழ் மாணவ நண்பர்