பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் குழந்தையின் தாயும் தந்தையும் ን፤ இத்தகு சிறப்பு வாய்ந்த உணர்வியலின் உயர்வுகளுள் எல்லாம் உயர்வற உயர்ந்தது எது? தாம் பெற்ற இன்பத் தைப் பிறர்க்குரிய இன்பமாகவும் ஆக்குவதே அந்த உயர்வு. இவ்வுண்மை திருவள்ளுவர் திருக்குறளில் ஒர் வரையறை யாகவே பின்வருமாறு திகழ்கிறது. - தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார் (399) இந்த அறிதல்-அறிவித்தல் ஆர்வமே இலக்கியத் தின்அடிப்படை-தாயும் தந்தையும், அறியும்போது அறிவு அறிவிக்கும் போது உணர்வு-இலக்கிய உலகில். இந்த அறிதல்-நுணுகி நுணுகி அறிதல்-துணுக்கி துணுக்கி அறிவித்தல் ஆர்வம்-தலை சிறந்த சிறுகதை, காவல்களால் நன்கு விளங்கும். மரபிலக்கியத்தினும் மறுமலர்ச்சி இலக்கியத்திற்கும் இந்த வாய்ப்பு ஏராளம்அதேைலயே அதற்குரிய கவர்ச்சியும் எனலாம். இந்த இரட்டை ஆர்வம்-ஆர்வ இரட்டை-படைப் போனுக்கு இருந்தால் மட்டும் போதாது. படிப்போனுக் கும் இருக்க வேண்டும்- இருப்பதால்தான் படைப் போன் வாழ்கிருன்: அவன் படைப்பும் வாழ்கிறது. ஒரிடத்தில் அட்சன் (Hudson) உரைப்பது போல படைப்போனுக்கு வாயுண்டு, சுவைப் போனுக்கு வாயில்லை; நெஞ்சு மட்டுமே உண்டு; சுவைஞன் ஊமை, ஆளுல் உள்ளம் உடைய ஊமை. இக் கட்டுரையின் அடிப்படைக் கருத்துக்களை விளக் கும் விளக்கப் படங்கள் வருமாறு: