பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இலக்கிய இயல் தாலும் அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அடங்காக ஆசை கொண்ட மனித மனம் தனக்கே தெரியும் விடை யைப் பெரிதும் மறக்க விரும்புகிறது; சிலபோது மறுக்க வும் முனைகிறது. இலக்கியத் துறையில் அறிதற்கும் அறிவித்தற்கும் கோக்கரிய கோக்கைக் காணவல்ல நுணுக்கரிய நுண்ணுணர்வு' இன்றியமையாதது. ஊனிக்னச் சுருக்கி உள்ளொளி பெருக்கியவர்க்கே இது எளி தாகும். ஆனல், பலர்க்கும் இது அரிதாகும். காரணம் மலரினும் மெல்லிய தாகிய இவ்வுணர்வுச் செவ்வியில் தலைப்படுவார் சிலரே. இச் சிலரே சிறந்த கலைஞர். பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்கள் அடிக்கடி வகுப்பில் சொல்லி வந்த ஓர் எடுத்துக் காட்டு கண்டு எடுத்துக் கூறத் தக்கது. செவ்வி அறியாப் பலர் உள்ளம் விறகுத் தராசு போன்றது; செவ்வி அறியும் சிலர் உள்ளமோ பொன் தராசு போன்றது.' பொன் கராசில் சிறு துகளுக்கும் மதிப்புண்டு. உயர்ந்த கலைஞர்கள் உள்ளம் மிக நுட்பம் வாய்ந்தது. அவர்கள் விறகுகளை எடை போடுவது இல்லை; பொன்னேயே எடை போடுவார்கள். அதற்கு ஏற்ற திட்ட நுட்பம் படைத்த வர்கள் அவர்கள். இந்த இயல்பில்ை கலைக்கு நன்மை, ஆளுல் கலைஞர்கட்கு, சிறப்பாக அவர்கள் உடல் நலத் துக்கு-நன்மை இல்லே. உணர்வுகள் உடலைப் பாதிக்க வல்லன. ஆளுல் உணர்வுகளேயே தம் உழைப்பின் மூலதன மாகக் கொண்டவர்கள் உயர்ந்த கலைஞர்கள். இந்த கிலேயில் தான் மனித வாழ்வின் மாபெரும் பண்பாடாய் விளங்கும் அளவறிதல் என்ற அருங்கலையில் வல்லவராய் நல்ல கலைஞர்கள் இருக்கும் இன்றியமையாமை ஏற்படு கிறது. இவ்வாறு இருக்க முடியாத மிக நல்ல கலைஞர்கள் வல்லமையற்றவராய் வாழ்விழந்து போகின்றனர். தான்