பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிக் 35% அடிப்படை (ஐம்பூத) இயல்புகள் மாறுவதில்லை. மாற்றம் எல்லாம் புறத் தோற்றங்களிலேயே. எனவே அடிப்படை உள்ளீடுகளிலும் அவற்றின் மாறும் எண்ணற்ற புறத் தோற்றங்களிலும் மனித உள்ளத்திற்கு ஆய்வாகவும் தோய்வாகவும் ஏற்படும் உள்ள உலக உறவுகளாலேயே உரைகள்-எல்லாவகை எண்ணங்களும் அவற்றின் அறிகுறிகனான எழுத்துகளும். இனி, மேலும் ஒரு. மேன்மை மிகு குறிப்பு: இரட்டையராய்ப் பிறந்த இருவர் உள்ளங்களும் ஒன்ருய் இல்லை; எனவே ஒவ்வொரு, உள்ளமும் ஒவ்வொருவகை. உள்ளத்தின் எண்ணமும் பேச்சும் செயலுமே வாழ்க்கை. கோடானு கோடி உள்ளங்கள்; கோடானு கோடி உணர்வுகள்; பேச்சுகள்;. செயல்கள். எனவே ஒரே உலகத்தில் கோடானு கோடி வாழ்க்கைகள். இவற்றின் வேறுபாடுகள் பெரிதும் இடம் பற்றியும், இனம் பற்றியும், காலம் பற்றியும். இந்த வேறுபாடுகளே இலக்கியக் கலைக்கு இன்றிமையாது. தேவைப்படும் விறுபாடுகள். - 2 நெகிழ்ச்சியின் பயனே கிகழ்ச்சி. உள்ளம் அசைங், தாலே உதடு அசையும்; உடல் அசையும். உதடும் உடலும் அசையவில்லை என்ருல் ஒன்றுமே இல்லை. அறிவற்ற பேசாமையைப் (மெளனத்தைப்) பற்றிப் பேச்சே இல்லை; அறிவுள்ள மெளனத்திற்கு மொழி ஏது? இலக்கியம் ஏது அருணகிரியார் செப்பும் பேசா அனுபூதி தான். அதன் பயன் தாயுமானவர் சொல்லும் கற்பனை ஒன்றில்லாக் கவி தான்! 3 எனவே, நெகிழ்ச்சியின் இருபெருவிளைவுகளான சொற். களும் செயல்களுமே இலக்கியத்தின் மூலப்பொருட்கள்