108 இலக்கிய ஏந்தல்கள் வேண்டும் என்று கூறி இறுதியாக, "தமிழ்நாட்டில், நம் தமிழ் பலதுறைகளிலும், தாழ்மைப்படுத்தப்பட்டிருக் கின்றது. அத்துறைகளில் சிலவற்றையே இதில் எடுத்துக் காட்டி இருக்கின்றேன். மற்றும் சில துறைகள் பின்னர் ஆகட்டும், இதை நான் எழுதியதின் நோக்கம். என்ன வெனில், தமிழார்வம்மிக்க இளைஞர்கள், இத்தகைய துறைகளில் தமிழ் முன்னேற்றங்கருதி இயன்றவரை கிளர்ச்சி செய்யவேண்டும் என்பதுதான் ஒரு கூட்டம் கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெரு த்தோறும் சென்று. பிறமொழி விளம்பரப்பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் சிளர்ச்சி செய்யின், தமிழ்விடுபடும், தமிழ்நாடு விடுபடும். எவ்வினையினும் இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத நல்வினை" என்றும் கூறுகின்றார். அன்னாரின் கனவு இன்று சிறிது சிறிதாக நனவாகிக்கொண்டிருக்கின்றது. இனம் சுயமரியாதை இயக்கத்தைத் ே தாற்றுவித்த பெரியார் அவர்கள் திராவிடநாடு நலம்பெற அரும்பாடுபட்டார். தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடியர் அனைவரும் நலமுடன் வாழ வழிவகுத்தார். இந்நிலையில் பாவேந்தர் அவர்களும் திராவிட இனம் ஒன்றுபட்டு திராவிடநாடு அடைதல் வேண்டும் என்று பாடினார். 'அடிமரம் ஒன்றேடா அதன்பெயர் திராவிடமே தடங்கிளைகள் ஐந்தல்லவா தமிழ் தெலுங்கு கேரளமே அடடே கன்னடம் துளுவம்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை