பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இலக்கிய ஏந்தல்கள் எடுத்துக்காட்டுகின்றார். முதியவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட இளைய கண்ணி ஒருத்தி படும் துன்பங் களை எல்லாம் எடுத்துக்கூறி இறுதியில் அவள் இக் கொடுமைக்கு ஆளாகக் காரணமான சமூக வழக்கைச் சாடுகின்றனர். "மண்ணாய்ப் போக! மண்ணாய்ப்போக! மனம் பொருந்தாமணம் மண்ணாய்ப் போகவே! சமூகச் சட்டமே! சமூக வழக்கே| நீங்கள் மக்கள் அனைவரும் ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே' சாதிசமய எதிர்ப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சமுதாயசி சீர்கேட்டிற்கு வேராக இருந்தவை சாதியும் சமய முந்தான். மக்களைப் பக்குவப்படுத்தி நன்னெறியில் இட்டுச் செல்லவே இங்கு சமயங்கள் தோன்றின. தொடங்கியதின் நோக்கம் சரிதான். ஆனால் சில தன்னலக்காரர்களின் தலையீட்டால் சமயம் சீர்கெட்டு விட்டது. அது சமுதாயச் சீர்கேட்டிற்கு வழிகோலியது. எதுவுமே தோன்றும்போது நல்லநிலையில்தான்தோன்றும் காலம் செல்லச் செல்ல சீர்கெட்டுவிடும் என்பர். அதற்கு இரையானதில் நம் சமயமும் ஒன்று. சமயம் சாதியை ஈன்றெடுத்தது. சாதி சமயத்திற்கு உறுதுணையானது, ஒன்றை ஒன்று பிரித்துக்காணமுடியாத அளவிற்கு இணைந்தன. அதனால் இவ்விரண்டையுமே சாடுகின்றாl பாவேந்தர். "இருட்டை றயில் உள்ளதடா உலகம்! சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!