பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இலக்கிய ஏந்தல்கள் 'கொலை வாளினை எட்டா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒருபுலியே உயர் குணமேவிய தமிழா' என்று தமிழனுக்கு உணர்ச்சி ஊட்டும்வண்ணம் கூறுகின்றார். கற்பனை பெண்களை மயிலுடன் ஒப்பிடுவர் புலவர்கள். பெண் களுக்குக் கழுத்து குட்டையானது. மயிலுக்கு கழுத்து நெட்டையானது. அனைத்திலும் பெண்கள்போலிருக்கும் மயிலுக்கு கழுத்தில் மட்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு. கற்பனை செய்து பார்க்கின்றார் கவிஞர். அவருக்கு ஒரு கருத்துப் புலப்படுகின்றது. அதனை நகைச்சுவையுடன் கலந்து உரைக்கின்றார். "அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப்பார்க்கா திருப்பதற்கே இயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள் உனக்கோ கறையொன்றில்லாக் கலாப மயிலே; நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்! இங்குவா! உன்னிடம் இதைச் சொன்னேன் மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற்காக" மாலைப்பொழுது, கொல்லையில் கவிஞரும் அவர்தம் மனைவியாரும் தென்றல் இதமாய் வீசுகின்றது. இந்நிலை யில் மனைவியார், வெந்தயக் கலத்தை பூனை தள்ளி