பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Й,ат. 141 மலையில்'ஏறி நிற்கின்றோம், மறிந்து கடலில் வீழ்கின்றோம்; கலவு புயலில் அகப்பட்டுச் சுழன்று சுழன்று செல்கின்றோம் அலையும் நுங்கும் நுரையும் எல் அடைந்த .யன்வே றொன்றுமிலை உலகின் உண்மை இதுவல்லால் உரைக்க வேறொன்றுண்டோ? சொல் (24) நன்மையும் தீமையும் ஒருங்கே வாழும் இடமாக மக்களைப் படைத்து விட்டு, மக்கள் தீமைகள் செய்யும் போது அவர்களைத் தண்டிப்பது படைத்தவனாகிய இறைவனுக்கு அழகாகுமா? நீதியாகுமா? என்று கேட்கிறார் கவிஞர் உமார் கய்யா.ே யாது சொன்னாய்? இன்னமுதம் ஏந்தி உண்ட கலமதனை மோதி உடைக்கும் அறிவில்லா மூடன் எங்கும் உண்டுகொலோ? ஒதற் கரிய பேரருளால் உவந்து கண்ட உருவமதைத் தீதென் றெண்ணிச் சினம்பெருகிச் சிதைக்கத் தெய்வம் துணிந்திடுமோ? (86) படைத்தவனையே பார்த்து வினாவெழுப்பும் கவிஞர், வைகறை நேரத்தில் பொய்கையோரச் சோலையில் மலர்ந்து மணம் பரப்பிய ஆயிரமாயிர மலர்கள் மாலை நேரத்தில் சேற்றில் உதிர்ந்து சருகாகிற காட்சியைக் காட்டி உலகவாழ்வை இதில் கண்ணாற்கண்டுதெளிவாயே என்று உணர்த்துகிறார். இன்ப துன்பங்கள், இரவு பகல், மேடு கள்ளம், உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தும்