A. turr. 153 செம்மொழிகள் என்பர். இவற்றுள் தலையாயது தமிழ் மொழி. தாய்மொழியின் வழி சிந்திக்கின்றவனின் ந்ெதனை தூண்டப்பெறும். "தாய்மொழிவழி அறிவைப் புகட்டுங்கள்" என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றினை அடியொற்றி, தத்தம் தாய்மொழியில் தாகூர், பாரதிபோன்ற தேசியக் கவிஞர்கள் நாட்டுப்பற்றினை மக்களுக்கு ஊட்டினர். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றும் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்றும் பாடுகின்ற பாரதி, ஆடுவோமே-பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று. எனப்பாடி மக்களிடை விழிப்புணர்ச்சி ஊட்டுகின்றதைப் போன்று நாமக்கல் கவிஞரும் தாய்மொழிச் சிறப்புடன் நாட்டுப் பற்றினையும் ஊட்டுகின்றார். தமிழ்த்தேன் மலர் என்னும் பகுதியில் உள்ள பாடல்கள் இதற்குச் சான்றாக உள. உலகிலுள்ள மனிதர் யாரும் ஒரு குடும்பம் என்னவே ஒன்றுபட்டு வாழும் மார்க்கம் தொன்று தொட்டுச் சொன்னது
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை