பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W.ram. 17.3" பொட்டென் றிருந்தவுன் மேனி மணம்பெறப் பூத்திடச் செய்தவன் நான்!-கலைக் கூத்திடச் செய்தவன் நான்! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 83. 1-6 இவர் படைப்பான கவிதைகள் பல அழியா அழகுடை யன என்றாலும் அழியவே அழியாத கவிதை (Immortaே Poem) எனக் குறிப்பிடத்தக்க சிறப்புகள் பலவும் பொதிந் நிலங்குவது பட்ட மரம்’ என்னும் கவிதையாகும்: உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து எனும் கவிதைக்கு வேண்டிய நாற்கூறுகளும் நலம்பெற நிறைந்தொளிர்வது இக்கவிதையாகும். கவிதையினை ஒருமுறை வாய்விட்டுப் படித்தாலேயே இவ்வுண்மை விளங்கக் காணலாம். பட்ட மரம் மொட்டைக் கிளையொடு கின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே! வெட்டப் படும்.ஒரு நாள்வரு மென்று விசனம் அடைந் தனையோ? குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை! வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்த னையோ?