பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...? 7 4 கட்டை யெனும் பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையே! பட்டை யெனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக் ஒலமி டக்கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்ற னையே! பாடும் பறவைகள் கூடி உனக்கொரு பாடல் புனைந்ததுவும் மூடு பனித்திரை யூடு புவிக்கொரு மோகங் கொடுத்ததுவும் ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்ததுவும், ஏடு தருங்கதை யாக முடிந்தன! இன்று வெறுங்கனவே! இலக்கிய ஏந்தல்கள் தமிழ ஒளியின் கவிதைகள் பக். 85-86