இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 92 இலக்கிய ஏந்தல்கள் கவிதையும் வாழ்வும் கவிஞர்தம் பருவுடல் மறையினும் புகழுடல் மறைவ தில்லையன்றோ? இதனைக் கவிஞர், வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா? எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்ப தியற்கையடா! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 145 என்று குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றினைக் கவிஞர் வாழ்க்கையின் உரைகல்லாகவும் கொள்ளலாம். 'யாத்திரை’ எனுங் கவிதை அவர் வாழ்வின் வார்ப்படமாக விளங்கக் காணலாம். கள்ள மிகுந்தக்கால் காணும்வழி அச்சுறுத்தும்! உள்ள மிசைந்தாலோ உறுதி தளராதாம்! போகும்வழி தூரமென்று பூமிதனில் அஞ்சிடிலோ சாகும்வரை நீந்துமிந்த சமுத்திரமும் தூரமன்றோ? உழைக்காமல் பாதுபயன்? ஓய்ந்தார்க்கு வெற்றியுண்டோ? அழைக்கின்றாள் கொல்லிமலை ஆரணங்கு: செல்லுகின்றேன்! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 116