&eitr. 199 நிலையிலிருந்து தமிழ்ப் பாடல்களை மீட்டதனால் கருத்துநிறைந்த பாடல்கள் பல நம் காதிற் புகுந்தன. கண்ணதாசனுக்கு முன்பே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தத்துவ இழையோடும் பாடல்களை வெள்ளித் திரைக்கென எழுதியதுண்டு. ஆனால் கண்ணதாசன் அதனை மிகுதியாக்கியதோடு மிகமிக எளிமையாகப் பாமரரும் எண்ணிச் சுவைக்குமளவு பெரிய தத்துவங் களைப் பாடல்களில் படைத்துக் காட்டினார். 'வாழ்க்கை என்பது வியாபாரம்-வரும் ஜனனம் என்பது வரவாகும்-அதில் மரணம் என்பது செலவாகும் இரவல் தந்தவன் கேட்கின்றான்-அதை இல்லை என்றால் அவன் விடுவானோ" என்று வாழ்க்கைப் போக்கினை ஒரு வணிக மொழியில் தத்துவ இழையோடு பாடுகின்றார். திரைப்படப் பாடல் களில் பட்டினத்தார், தாயுமானவர் போன்ற மெய்ஞ் ஞானிகளின் கருத்துகள் கண்ணதாசனால் எளிய உரை பூண்டு உலா வந்தன. தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, கெட்டபின்பு ஞானி என்பன போன்ற அடிகள் இலக்கியம் தெரிந்த எவர்க்கும் பட்டினத்தாரை நினைவூட்டும். பழைய கருத்துகளை மேலும் புதிய மெருகுடன் இருபதாம் நூற்றாண்டு மக்கள் மனத்திற்குத்தகச் சொன்ன பாவலர். கண்ணதாசன். திரை உலகில் கண்ணதாசன் கதை: உரையாடல் எழுதுகின்றவர்களையும் தா ன் டி ப் பாத்திரத்தை அறிவார்ந்த நிலைக்குக் கொண்டுபோகும் வகையில் பாடல்களை மழையாகக் கொட்டியவர். இசைப் பாடல்கள் உலாவந்த திரை உலகில் கவிதைக் கனிகள் பழுத்துக் குலுங்க வழிசெய்தவர் கண்ணதாசன்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/199
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை