பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 இலக்கிய ஏந்தல்கள் கோயம்புத்துாரில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டில் "அழகின் சிரிப்பு என்ற தலைப்பில் ஒரு கவிதை இயற்றி, அக்கவிதை முதற்பரிசுக்குரியதெனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரால் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிறப்பினைப் பெற்றார். 1966ஆம் ஆண்டில் "முடியரசன் கவிதைகள்' என்ற நூலும், 1973 ஆம் ஆண்டில் "வீர காவியம்' என்றநூலும் தமிழ் நாட்டரசின் பரிசினைப் பெற்றன. தனிச் சிறப்பிற் குரிய பாடல்கள் என இவர் தம் சில கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பெற்று அப்பாடல்கள் சாகித்திய அகாதெமியினரால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1966ஆம் ஆண்டில் இவர் திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தார் நடத்திய பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளா ரால் 'கவியரசு' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். o: so பல்வேறு சிறப்புக்களைப் பெற்றுத் தம் மணிவிழா வினையும் கொண்டாடி முடித்து என்றும் நானோர் இளைஞன்” என்னும் உணர்வுடன் வாழ்ந்தவர். கவிஞர். முன்னாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், தமிழகப் புலவர்குழுவின் தலைவரும், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் தலைமாணக்கருமான டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஊன்றுகோல்' என்ற இக் காப்பியத்தைக் கவிஞர் முடியரசன் கவின் பெறப் புனைந் துள்ளார். பண்டிதமணி அவர்களின் வாழ்க்கை வரலாற் றினை வகைபட விரித்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ள இக் காப்பியம் பண்டிதமணியின் இயல்புகளையும்,