பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இலக்கிய ஏந்தல்கள் எனக்கும் உனக்கும் இசைக்த பொருத்தம் என்ன பொருத்தமோ என்று இராமலிங்க அடிகளார் பாடிய பாடல், அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள்புரிந்தது கதையா என்று மீண்டுமொரு வடிவந்தாங்கி வந்துள்ளது, இக்குரல், உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா? என்ற இசைப்பாடலில் மேலும் தெளிவாக ஒலிக்கக் கேட்கலாம். திரைப்பாடல்களின் மூலம் புயல்வேகப் புகழ் எய்திய பாட்டுக்கோட்டையாராம் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் குறிப்பிடத் தக்கவர்; பாவேந்தர் பாரதி தாசனாரின் வழியேற்றுப் பாடிய பாவலர். விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை விளையாடக் கொடுத்திட்டாள் இயற்கையன்னை என்று பாடும் பட்டுக்கோட்டையார் தத்துவ நோக்கிலும் பாடி மக்கள் மொழி நடையில் மக்களின் இதயங்களைக் கவர்ந்து காலம் மறவாப் பெருமைக்குரிய பாவலரானார். இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே என்று பட்டுக்கோட்டையார் பாடிய திரைப்பாடல் அரும் வாழ்க்கைத் தத்துவம் கொண்டு திகழ்கின்றது. இரை யுண்ணும் வெள்ளாடு இரையாகும் அவலம் போலவே,