பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

иl, ит. 231 தமக்குநிகர் இலாமணியாய் விளங்க நறகத தழைத்துவரும் அருள்மனத்தர் பழகி யப்பர் அமைத்தசபை இவருக்கோர் ஊன்று கோலாய் அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக் கண்டோம் (3:31) நான்காவதாகக் கவியரசு ஊன்றுகோலைப் பின்வரு மாறு காட்டுகின்றார் : உறுப்பிணியாற் கால்தளர்ந்த கதிரேசர் உளந்தளரார், ஊன்று கோலின் பெருவலியால் நாடெங்கும் கடந்துலவித் தமிழ்பரப்பி ஆதனைப் பேணாச் சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்ம்ாந்தர் செயலாற்ற ஊன்று கோலாய் வருபவர்தாம் இவரென்று தெளியார்தம் மகட்கொடைக்கு மறுத்து வந்தார் (4,5) இறுதிக் காதையான சிலைகாண் காதை"யிலும் ஊன்றுகோல் தப்பாது இடம் பெறுகின்றது. ஊன்றுகோல் கொண்டே யாண்டும் உலவிகற் றமிழ்வ ளர்த்தார் ஊன்றுகற் சிலையாய் நின்றார் ஆயினும் உய்வு காண ஊன்றுகோள் நமது ளத்தில் ஒவ்வொன்றும் மணிக ளாகும் ஊன்றி நாம் எண்ணியெண்ணி உருப்பெற உழைத்தல் வேண்டும் (17:7) இவ்வாறு "பண்டிதமணி கையகத்தே எப்பொழுதும் விளங்கி, அன்னாரது இயக்கத்திற்குத் துணைநின்ற அரிய ஊன்றுகோலினையே காப்பியப் பெயராகக் கொண்டு"