பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 இலக்கிய ஏந்தல்க இந்நூல் திகழ்கின்றது. "தமிழுக்குத் தளர்வு வராது எழுத்து, பேச்சுச் செம்மைகளை வற்புறுத்தி அம்மொழி வளர்ச்சிக்கு ஒர் ஊன்றுகோலென விளங்கியமையாலும் இக்காப்பியம் அச்சொல்லாட்சியில் அக்கறை காட்டிப் பல விடத்தும் நன்கு புனைகிறது" என்று காப்பியத் தலைப்புப் பொருத்தத்தினைப் பாராட்டுவர் டாக்டர் தமிழண்ணல் அவர்கள். காப்பியத் தொடக்கம் காப்பியம் மங்கலச் சொல்லால் தொடங்கப்பெற வேண்டும் என்பர். தமிழின் முதற்காப்பியமாம் சிலப்பதி காரம் திங்கள் என்ற மங்கலச் சொல்லால் தொடங்கு கின்றது. தொண்டர்சீர் பரவவல்ல சேக்கிழார் இயற்றி யருளிய பெரியபுராணம் உலகெலாம் உணர்ந்து எனத் தொடங்குகின்றது. கம்பநாடர் இயற்றிய இராமாயணம் 'உலகம் யாவையும் எனத் தொடங்குகின்றது. கவியரசு முடியரசனாரும் முன்னோர் சென்ற வழியில் முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றுவம் என்பதற்கேற்பத் தம் காப்பியத்தைப் பின் வருமாறு தொடங்குகின்றார். உலகெலாம் உய்ய வைக்கும் உயரிய கொள்கை யாவும் நிலவிய தொகையும் பாட்டும் நிகழ்த்திய சங்கம் ஏறி அலகிலாப் பெருமை பூண்டாள் அன்னையாம் தமிழ ணங்கின் மலருளாம் அடிகள் வாழ்த்தி மகிழ்வுற மனத்துள் வைப்பாம்